| ADDED : ஜன 11, 2024 04:03 AM
புதுச்சேரி: உலக தமிழர் பொருளாதார மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பங்கேற்றார்.சென்னை வளர்ச்சி கழகம் இரண்டு நாள் நடத்தும் 10வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள ஒட்டல் லீ ராயல் மெரிடியனில் நடந்தது. மாநாட்டினை புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்து பேசினார்.நிகழ்ச்சியில் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி., இளங்கோவன், பழனி பெரியசாமி, மொரிஷியஸ் முன்னாள் ஜனாதிபதி, வையாபுரி பரமசிவம், மாநாட்டு தலைவர் சம்பத், வரவேற்பு குழு தலைவர் சந்தோஷம் உள்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில் உலகம் முழுதும் இருந்து வணிகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போதைய உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள், சவால்கள், சிறு, குறுதொழில்களில் புதுமையான திட்டங்கள் மற்றும் புத்தாக்க தொழில்கள், சமூக மேம்பாடு, வணிக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்காக தொழில் முனைவோர்களுடன் பணிகளை பகிர்ந்து கொள்ளுதல், உலகளாவிய கூட்டுறவை ஏற்படுத்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.