உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தொடரும் மாஜி கவர்னர் தமிழிசை உருக்கம்

புதுச்சேரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தொடரும் மாஜி கவர்னர் தமிழிசை உருக்கம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து விடைபெற்ற மாஜி கவர்னர் தமிழிசை, புதுச்சேரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தொடரும் என உருக்கமாக தெரிவித்தார்.கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நேற்று மதியம் கவர்னர் மாளிகை வந்தார். கவர்னர் மாளிகை பணியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து புறப்படுவதற்கு முன், நிருபர்களிடம் அவர், கூறியதாவது; என் மீது அன்பு பொழிந்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி. இந்த அன்பு தொடரும். சேவை செய்ய சில நேரம் கடுமையான முடிவு எடுக்க வேண்டி உள்ளது. புதுச்சேரி பணி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. நல்ல திட்டங்களுக்கு மனசாட்சி படி ஒப்புதல் அளித்தேன். மக்கள் சேவை செய்ய செல்கிறேன். எந்த தொகுதியாக இருந்தாலும் கட்சி முடிவை ஏற்பேன். நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பது எனது வேண்டுதல். மோடி பிரதமராக இருப்பதால் தான் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது' என்றார்.

முதல்வர் சந்திப்பு

கவர்னர் மாளிகை வந்த முதல்வர் ரங்கசாமி, தமிழிசை சந்தித்து பேசினார். பின், முதல்வர் கூறுகையில், 'தேர்தலில் போட்டியிட உள்ள தமிழிசையை சந்தித்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., இணைந்து இருப்பது மகிழ்ச்சி. எங்களது கூட்டணி வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. புதுச்சேரி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்' என்றார். வழியனுப்பு அணிவகுப்பு மரியாதை:ராஜினாமா செய்து புறப்பட்ட தமிழிசைக்கு, தலைமை செயலர் சரத் சவுக்கான், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், மற்ற துறைகளின் அரசு செயலாளர்கள் தமிழிசை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் மாளிகையில் போலீசார் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தமிழிசை காரில் புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை