மேலும் செய்திகள்
தினமலர்- - பட்டம் இதழ் அறிவு பெட்டகம்
5 hour(s) ago
காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி
5 hour(s) ago
வளைகாப்பு விழா
6 hour(s) ago
உழவர்கரை நகராட்சி கொசு மருந்து தெளிப்பு
6 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் ரேஷன் கடை திறந்து இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, எண்ணெய், சர்க்கரை வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் 1,67,353, லட்சம் மஞ்சள் ரேஷன் கார்டுகளும், 1,86,397 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுகள் என மொத்தம் 3,50,750 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இவற்றில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சிவப்பு ரேஷன் கார்டு குடும்பத்தினருக்கு மத்திய அரசின் பிரதமர் மந்திரியின் கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ அரிசி வீதம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அரிசிக்கான பணம் குடும்ப தலைவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.இதனால் மாநில அரசு சார்பில் இலவச அரிசி கொடுக்கும் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு துவக்கப்பட்டது. சிவப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மாநில அரசு வழங்கிய இலவச அரிசி தரமற்றதாகவும், கமிஷன் பெறப்படுவதாக கடந்த காங்., ஆட்சி காலத்தில் புகார்கள் எழுந்தது. இதனால் ரேஷனில் அரிசி வழங்குவதற்கு அப்போது கவர்னராக இருந்த கிரண்பேடி அனுமதி மறுத்தார்.இதனால் மத்திய அரசு வழங்குவதுபோல், மாநில அரசின் இலவச அரிசிக்கு பதில் மானிய தொகையை கணக்கில் செலுத்த அனுமதி அளித்தார். அதன்படி, மாநில அரசு வழங்கும் இலவச அரிசிக்கான பணம் சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ. 600, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ. 300 பணம், குடும்ப தலைவி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.வங்கியில் செலுத்தப்படும் பணத்திற்கு பதில் அரிசி வழங்க பெரும்பாலான கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் ரங்கசாமியிடம், இலவச அரிசி வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.பணத்திற்கு பதில் ரேஷன் கடைகள் திறந்து இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார். அதன்படி, தற்போது இலவச அரிசி வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது;புதுச்சேரி பட்ஜெட் தாக்கலுக்கு இதுவரை மத்திய அரசு அனுமதி தரவில்லை. ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி கண்டிப்பாக விரைவில் வழங்கப்படும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது கூட அந்த கோப்பு தான் பார்த்தேன். கூடுதலாக மானிய விலையில் பருப்பு வகைகள், எண்ணெய், சர்க்கரை கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான கோப்பிற்கு கவர்னரிடம் ஒப்புதல் அளித்துள்ளார்.அரிசி வாங்குவதிற்கு டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. அரிசி மற்றும் மானிய விலையிலான மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள், கூட்டுறவு துறைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்குள் நிபா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.
கொரோனா நோய் பரவலுக்கு பிறகு ஊட்டச்சத்து மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. புதுச்சேரி மக்கள் தினசரி எந்த மாதிரியான உணவு சாப்பிடுகிறார்கள் என ஆய்வு மேற்கொள்ள உள்ள னர். இதன் மூலம் மக்களின் ஆரோக்கிய உணவில் உள்ள குறைபாடுகள் தெரிந்து கொள்ள முடியும்.குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் நோயற்ற வாழ்க்கை வாழ முடியும். பழங்கள் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலையில் வழங்கப்படும் பால் ரொட்டியுடன் பழம் கொடுக்கவும், மாலையில் சிறுதானிய உணவுடன் சுண்டல் கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய சாப்பிடும் பழக்கத்தை இடையில் நாம் விட்டு விட்டோம். தற்போது சிறுதானிய உணவுகளை தேடி வருகிறோம். அரசு மூலம் என்னென்ன வகையில் குழந்தைகளுக்கு ஊட்டசத்து கொடுக்க முடியமோ அதை அரசு கொடுக்கும்.
கூட்டுறவு சார்பில் 438 ரேஷன் கடைகளும், பாப்ஸ்கோ சார்பில் 47, தனியார் மூலம் 26, மற்ற 4 ரேஷன் கடைகள் என மொத்தம் 515 கடைகள் உள்ளது. இதில், புதுச்சேரியில் 384, காரைக்காலில் 91, மாகியில் 18, ஏனாமில் 22 கடைகள் உள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago