உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் தேவை அறிந்து பணியாற்றுவேன்; புதிய தலைமை செயலர் சரத் சவுக்கான் பேட்டி

மக்கள் தேவை அறிந்து பணியாற்றுவேன்; புதிய தலைமை செயலர் சரத் சவுக்கான் பேட்டி

புதுச்சேரி : புதுச்சேரி மக்களின் தேவைகள் அறிந்து பணியாற்றுவேன் என புதிய தலைமை செயலர் சரத் சவுக்கான் தெரிவித்தார்.புதுச்சேரி தலைமை செயலர் ராஜிவ் வர்மா, கடந்த மாதம் 29ம் தேதி சண்டிகருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தில் பணி புரிந்த 1994 பேட்ஜ் அதிகாரி சரத் சவுக்கான் புதுச்சேரி தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.புதுச்சேரி தலைமை செயலராக பொறுப்பேற்று கொண்ட சரத் சவுக்கான், நேற்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அதைத் தொடர்ந்து தலைமை செயலர் சரத் சவுக்கான் நிருபர்களிடம் கூறியதாவது; புதுச்சேரி மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். சுகாதாரம், கல்வி, மாநிலங்களின் சமூக மேம்பாடு ஆகியவற்றில் முழு கவனம் செலுத்துவேன்.புதுச்சேரி மக்களின் தேவைகளை அறிந்து மாநில வளர்ச்சி மற்றும் நலனுக்காக பாடுபடுவேன். முன்னதாக சபாநாயகர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !