உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியன் வங்கி சிறப்பு கடன் முகாம்

இந்தியன் வங்கி சிறப்பு கடன் முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி மண்டலம் இந்தியன் வங்கி சார்பில், சிறப்பு தனி நபர் கடன் வழங்கும் முகாம் நாளை 9ம் தேதி நடக்கிறது.வள்ளலார் சாலையில் உள்ள வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடக்கிறது. முகாமில், தனி நபர் கடன், வீட்டு கடன், வாகனக் கடன், சிறு, குறு தொழில் மற்றும் வர்த்தக கடன், தனி நபர் மற்றும் தொழில் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.தகுதியுள்ள நபர்களுக்கு, அவர்கள் எடுத்து வரும் ஆவணங்களை உடனடியாக பரிசீலனை செய்து, கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும், மற்ற வங்கியில் இருக்கும் கடனை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 9489978101, 7010540745, 9489978098 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை