உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் ரூ. 12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றியை துணை சபாநாயகர் ராஜவேலு இயக்கி வைத்தார்.நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை, குச்சிப்பாளையம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் நிலவி வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர்.அதையடுத்து மின்துறை சார்பில், ரூ. 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, புதிதாக 315 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.இதன் துவக்க நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு மின்மாறியை இயக்கி வைத்தார். செயற்பொறியாளர் அன்பழகன், இளநிலை பொறியாளர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி