உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலைவாய்ப்பு முகாம் பணி ஆணை வழங்கல்

வேலைவாய்ப்பு முகாம் பணி ஆணை வழங்கல்

புதுச்சேரி:புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஸ்கில்டா பயிற்சி நிறைவு விழா நடந்தது.விழாவிற்கு கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதோராவ் மோரே வரவேற்றார். சென்னை ஸ்கில்டா தலைமைப் பார்வை அதிகாரி கொட்டாரம் ரமேஷ் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பேசினார்.விழாவில்,கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கினர்.சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேலை வாய்ப்பு முகாமில் புதுச்சேரி, காரைக்கால்,மாகே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குனர் அமன் ஷார்மா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி