| ADDED : நவ 26, 2025 07:44 AM
புதுச்சேரி: புதுச்சேரி அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மொழி நல்லிணக்க நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவையொட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில், பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், புதுவையில் உள்ள 35 பள்ளிகளில் இருந்து 175 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெவ்வேறு பள்ளிகளில் இருந்து 12 ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர். அவர்கள் அளித்த முடிவின் படி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விரிவுரையாளர் சுந்தரி, ஆசிரியர்கள் கௌரி, தேவி, சாந்தகுமாரி, ஜானகி, ராமச்சந்திரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர். இறுதியாக மனையில் பிரிவு விரிவுரையாளர் தெய்வகுமாரி நன்றி கூறினார்.