| ADDED : ஜன 31, 2024 02:35 AM
வில்லியனுார் : வில்லியனுாரில் மாமூல் கேட்டு, கடையை சூறையாடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார், ஒதியம்பட்டு சாலை, மாதா கோவில் அருகே வசிப்பவர்சுப்ரமணி,55;வீட்டிலேயே மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுப்ரமணியின் மனைவி செல்வி கடையில் இருந்தார். கடைக்கு பைக்கில் வந்த இரு வாலிபர்கள்செல்வியிடம் ஓசியில் சிகரெட் மற்றும் மாமூல் கேட்டனர்.செல்வி கொடுக்க மறுத்தார்.ஆத்திரமடைந்த இருவரும் கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து, அங்கிருந்த பொருட்களை எடுத்து வீசினர். நாங்கள் வந்துமாமூல் கேட்டால் கொடுக்கனும் இல்லையென்றால் இங்கு கடை நடத்த முடியாது என்று மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, சப் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கரையான்பேட் பகுதியை சேர்ந்த விக்கி,20, மற்றும் ஒருவர் கடையை சூறையாடியது தெரியவந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.