உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு சாரம்; கோவிலில் மகா அபிேஷகம்

மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு சாரம்; கோவிலில் மகா அபிேஷகம்

புதுச்சேரி : மாசி மக தீர்த்தவாரிக்கு புதுச்சேரி வந்த மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு, சாரம் முருகர் கோவிலில் மகா அபிேஷகம் நடந்தது.புதுச்சேரி வைத்திக் குப்பம் கடற்கரையில் நடக்கும் மாசி மகம் தீர்த்தவாரியில் பங்கேற்க ஒவ்வொரு ஆண்டும் மயிலம் சுப்ரமணிய சுவாமி புதுச்சேரிக்கு வருவது வழக்கம். இந்தாண்டு மாசி மக தீர்த்தவாரி இன்று நடக்கிறது. தீர்த்தவாரியில் பங் கேற்க புதுச்சேரி வந்த மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு, சாரம் முருகர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரத்தில் சாரம் பகுதியில் சுவாமி வீதி உலா நடந்தது. மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தீர்த்தவாரி முடிந்து மயிலம் திரும்பும் சுப்ரமணிய சுவாமிக்கு, வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது.அதன்பின்பு சுப்ரமணிய சுவாமி மயிலம் புறப்படுகிறார்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை