மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
21 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
21 hour(s) ago
வில்லியனுார், : வில்லியனுார் அருகே கட்டட வேலையில் ஈடுபட்ட கொத்தனார் கீழே விழுந்ததில் கழுத்தில் பலத்த காயமடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் முருகன்,42; இவர் புதுச்சேரி பாலாஜி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்நிறுவனம் சார்பில் அரும்பார்த்தபுரம் வெண்ணிசாமி நகரில் கட்டட வேலை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முருகன் வேலை செய்துகொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் முருகனை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.முருகன் சகோதரர் பாபு கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் கட்டுமான நிறுவனம் மீது வழக்குப் பதிந்து செய்துள்ளார்.
21 hour(s) ago
21 hour(s) ago