உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., பூமி பூஜை

பள்ளி கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., பூமி பூஜை

வில்லியனுார் : வி.மணவெளியில் பள்ளி கட்டடம் கட்ட சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.புதுச்சேரி பொதுப்பணித்துறை சிறப்பு கட்டட கோட்டம் சார்பில், வி.மணவெளி அரசு ஆரம்ப பள்ளிக்கு 51 லட்சத்து 89 ஆயிரம் செலவில் இரு வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான பூமி பூஜையில் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், சிறப்பு கட்டட கோட்டம்-2 செயற்பொறியாளர் சுப்பராயன், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன்நேரு, சிறப்பு கோட்ட உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் சுந்தரராஜி மற்றும் முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம், தி.மு.க நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, சபரி, ரமணன், தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை