உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

லோக்சபா தேர்தலையொட்டி, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் அந்தந்த காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், கலெக்டர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு:லேக்சபா தேர்தலை முன்னிட்டு பலவித முன்னேற்பாட்டு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்காகவும் தேர்தலின்போது ஆயுதங்களை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அகற்றும் நோக்கத்திற்காகவும் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை படைக்கலன்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் என, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.எனவே, புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும் துப்பாக்கி பயன்படுத்தவும், கொண்டு செல்லவும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே படைக்கலன் உரிமம் பெற்றிருப்போர் தங்கள் வசம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனடியாக தங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். தவறினால் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் ஒப்படைக்க நிர்பந்திக்க வேண்டும்.உரிமம் பெற்ற துப்பாக்கிகள் சமர்பித்தது குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்காக கொண்டு செல்லும் பாதுகாப்பு துப்பாக்கி உரிமத்திற்கு இது பொருந்தாது. துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன், துப்பாக்கி சுடும் விளையாட்டில் பங்கேற்க விரும்புவோர்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ