உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை

குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை

புதுச்சேரி : மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.லாஸ்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ், 45; பெயிண்டர். இவரது மனைவி புஷ்பலதா தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சுரேஷ் தொடர்ந்து குடித்து வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இவரது மனைவி, குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு, தனது தம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார்.இதனால் மனமுடைந்த, சுரேஷ் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை