உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர சோதனை

 பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர சோதனை

புதுச்சேரி: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரயில் நிலையம், மாநில எல்லை பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இன்று (6ம் தேதி) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நாடு முழுதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநில எல்லையான கோரிமேடு, கனகசெட்டிக்குளம், கன்னியக்கோவில், மதகடிப்பட்டு, திருக்கனுார் ஆகிய பகுதியில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், கோவில்கள், கடற்கரை பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை