உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை

சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை

நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.நெட்டப் பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு திருமஞ்சம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். மாலை 6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு, தீபாராதனை, சாற்று முறை உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை