உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் பயிற்சி

10ம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் பயிற்சி

திருக்கனுார்,: துச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 'வெற்றி நிச்சயம்' சிறப்பு பயிற்சிப் பட்டறை நடந்தது.சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி பட்டறைக்கு, தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, மாணவர்களுக்கு பயிற்சியின் நோக்கம், பொது தேர்வுக்கான முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்.சுத்துக்கேணி அரசுப் பள்ளி கணித ஆசிரியர் குமரவேல், சமூக அறிவியல் ஆசிரியர் சரவணகுமார், சந்தைபுதுகுப்பம் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சோமசுந்தரம், கொடாத்துார் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் மோகன்ராஜ், வீராம்பட்டினம் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கார்த்திக் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இதில், வாதானுார், செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கொத்தபுரிநத்தம், சோரப்பட்டு உள்ளிட்ட அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ஏஞ்சல் மேரி, சூரியகுமாரி, செல்வகுமரன், மாணிக்கவேலு மற்றும் வேலவன் ஆகியோர் உடனிருந்ததனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ