மேலும் செய்திகள்
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
1 minutes ago
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள்
2 minutes ago
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
5 minutes ago
மனதின் குரல் இன்று ஒலிபரப்பு
5 minutes ago
புதுச்சேரி: இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளம் சார்பில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ள, உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு சீருடைகள், உபகரணங்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு கல்வித்துறையின் சார்பாக, மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி நடந்தது. இதில், 19 மற்றும் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சிறப்பாக விளையாடி திறமைகளை வெளிப்படுத்திய, உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் லாரன்ஸ், உதயகுமார் இருவரும், இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளனம் சார்பாக, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, உதவும் பொருட்டு பள்ளியின் துணை முதல்வர் சிவராம ரெட்டி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் சீரிய முயற்சியால், ஓய்வு பெற்ற இளநிலை கணக்கு அதிகாரி அதிகாரி ரொட்டேரியன் சிவராமசந்திரன், மாணவர்கள் லாரன்ஸ், உதயகுமார் இருவருக்கும் விளையாட்டு சீருடைகள், உபகரணங்கள் மற்றும் பயண செலவிற்கு நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தினார். முன்னதாக, நிகழ்ச்சிக்கு, தமிழாசிரியர் ஜனார்த்தனன் வரவேற்றார். செந்தில்நாயகம் நன்றி கூறினார்.
1 minutes ago
2 minutes ago
5 minutes ago
5 minutes ago