உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரங்கசாமிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

ரங்கசாமிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

புதுச்சேரி : 'இந்திரா நகர் இடைத் தேர்தலில் ரங்கசாமிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்' என, தமிழக அமைச்சர் சம்பத் பேசினார்.இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி. மு.க., வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து தமிழக அமைச்சர் சம்பத் பேசியதாவது:முதல்வர் ரங்கசாமி ஏற்படுத்தியதுதான் இந்த இடைத்தேர்தல். முதல்வர் ஏற்படுத்திய இடையூறு இது. அ.தி. மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் யாராக இருந்தாலும் வெற்றி பெறுவார்கள். முதல்வர் ரங்கசாமி பேராசைப்பட்டு இரு தொகுதிகளில் நின்றார். ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் புதுச்சேரிக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளது. நன்றியை மறந்தவர் ரங்கசாமி. காலந்தோறும் தன்னைச் சுற்றி வந்த ஜெயபாலுக்கு சீட் தரவில்லை. அவரை ஏமாற்றி விட்டார். சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு சீட் கொடுத்துள்ளார்.ரங்கசாமி ஆட்சி இருந்தால் ஒட்டுமொத்த திட்டங்களுக்கும் கடிவாளம் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தமிழகத்தில் தொலைநோக்கு பார்வையில் அ.தி.மு.க., அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அங்கு இலவச லேப் டாப், தங்கத்தில் தாலி, முதியோர் பென்ஷன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கும் ஆட்சியைப் பிடித்தால், தமிழகத்தின் திட்டங்கள் புதுச்சேரியிலும் செயல்படுத்த அ.தி. மு.க., தயாராக உள்ளது. ரங்கசாமி கட்சிக்கு கடிவாளம் போட வேண்டும். மாறியுள்ள அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு சம்பத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை