உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எப்போதும் மக்களை நினைக்கும் முதல்வர் : பன்னீர்செல்வம் பெருமிதம்

எப்போதும் மக்களை நினைக்கும் முதல்வர் : பன்னீர்செல்வம் பெருமிதம்

புதுச்சேரி : முழு நேரமும் மக்களை பற்றியே யோசிப்பவர் தான் முதல்வர் ரங்கசாமி என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். அகில இந்திய அனைத்து சமுதாய நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உழவர்கரை தொகுதி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. அரும்பார்த்தபுரம் திரு.வி.க., அரசு பள்ளியில் நடந்த முகாமிற்கு ஜெயலட்சுமி துவக்க உரையாற்றினார். சங்கத் தலைவர்கள் நடராஜன், பூரணி, சையத் பாரூக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர்கள் ஜீவா, ராமன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமை துவக்கி வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: எந்த அரசாக இருந்தாலும், ஊனமுற்றோர்களை இரக்க குணத்துடன் பார்க்கும். ஊனமுற்றோர் என்ற பெயர் புண்படுத்தும் படி இருந்ததால், தமிழகத்தைப் பின்பற்றி, இங்கும், மாற்று திறனாளிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. எந்த அரசும் உங்களை வஞ்சிக்கும் அரசாக இருக்காது. 750 ரூபாயாக இருந்த முதியோர் உதவித்தொகையை முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றவுடன் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார். மேலும், 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வரும் பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பார் என நம்பிக்கை உள்ளது. ஊனமுற்றோருக்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி, சிகப்பு நிற ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 25 கிலோ அரிசி வழங்கப் படுகிறது. ஏற்கனவே தரமற்ற அரிசி வழங்கப்பட்டது. ரங்கசாமி ஆட்சிக்குப் பிறகு, தரமான அரிசி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். 24 மணி நேரமும் புதுச்சேரி மக்களை பற்றியே யோசிக்கக் கூடியவர் முதல்வர் ரங்கசாமி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை