மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
22 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
25 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
33 minutes ago
புதுச்சேரி : பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மரக்கன்று உற்பத்தி பணியில் ஈடுபட்டனர்.ஈஷா யோகா சார்பில், லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்திற்கு தேவையான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, செயின்ட் பேட்ரிக் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படையின் மாணவ, மாணவிகள் 100 பேர், மரக்கன்று உற்பத்தி செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.பிளாஸ்டிக் பைகளில் மண், உரம் நிரப்பி, விதைகள் இடும் பணி மேற்கொண்டனர். என்.எஸ். எஸ்., திட்ட அலுவலர் இளவழகன், பசுமைப்படை திட்ட அலுவலர் பாலன் ஆகியோர், மாணவர்களை வழிநடத்தினர்.
22 minutes ago
25 minutes ago
33 minutes ago