உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செயல்படுத்தாத திட்டங்களின் பட்டியலை வெளியிட தயாரா?

செயல்படுத்தாத திட்டங்களின் பட்டியலை வெளியிட தயாரா?

புதுச்சேரி : உத்திர பிரதேச மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, எஸ்.பி.,ரச்சனா சிங், புதுச்சேரி பல்கலை., பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார் ஜெய்ஸ்வால், பங்கஜ் சர்மா, லதா சுக்லா, ராகவேந்திரா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:எதிர்க்கட்சி தலைவர் சிவா, 'விக்சித் பாரத்' நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் தவறுதலாக நடத்தப்படுவதாக கூறியுள்ளார். விக்சித் பாரத் முழுமையாக அரசு நிகழ்ச்சி மட்டும் கிடையாது. பயனாளிகளுக்கு மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. இதில் அதிகாரிகள் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் விவரங்கள் வெளியிடப்படும். மத்திய, மாநில அரசின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்கிறார்களோ அதன் பட்டியலை வெளியிட தயாரா? வெளியிட்டால் அதற்கான பதில் தெரிவிக்கிறேன்.அயோத்தியில் கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் திறக்கப்பட்டதாக விமர்சனம் செய்கிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி புதிய சட்டசபை கட்டடத்தை, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை வைத்து திறந்தார். அப்போது அதற்கு கூரை கூட அமைக்கவில்லை. செட் அமைத்து திறக்கப்பட்டது. உங்களுக்கு தான் இறை நம்பிக்கை இல்லையே கோவில் கட்டி முடித்து திறந்தால் என்ன. முடிக்காமல் திறந்தால் என்ன. அனைத்தையும் அரசியலாக்க பார்கின்றனர்.இவ்வாறு கவர்னர் பேசினார்.

புறக்கணிக்க வேண்டாம்

கவர்னர் தமிழிசை கூறுகையில், 'கவர்னர் மாளிகையில் குடியரசு தினவிழாவில் நடைபெறும் தேனீர் விருந்து நிகழ்ச்சியை எதிர்க்கட்சியினர் உள்பட யாரும் புறக்கணிக்க வேண்டாம். கவர்னர் மாளிகை விருந்தை, அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம். ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறையை வைத்து பக்தியை எடை போட வேண்டாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை