உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி

புதுச்சேரி : குடியரசு தினத்தையொட்டி இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை 24ம் தேதி நடக்கிறது.குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவையொட்டி, இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை 24ம் தேதி நடக்கிறது. மேலும், புதுச்சேரியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை