உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / களிஞ்சிக்குப்பத்தில் ஆற்றுத்திருவிழா

களிஞ்சிக்குப்பத்தில் ஆற்றுத்திருவிழா

நெட்டப்பாக்கம் : களிஞ்சிக்குப்பம் தென் பெண்ணையாற்றில் தை திங்கள் 5ம் நாள் ஆற்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வரும் 19ம் தேதி ஆற்றுத்திருவிழா மற்றும் சுவாமி தீர்த்தவாரி நடக்கிறது. இதில் பண்டசோழநல்லுார், மடுகரை, கல்மண்டபம், கரியமாணிக்கம், வடுக்குப்பம், கரையாம்புத்துார் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுவாமிகள் தீர்தவாரிக்கு செல்கிறது. அங்கு தனித்தனி பந்தலில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை