உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை; பிரியாணி கடை ஊழியர் கைது

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை; பிரியாணி கடை ஊழியர் கைது

புதுச்சேரி : சாரம் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற பிரியாணி கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.சாரம் பகுதியில் டி.நகர் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். சாரம் ஆட்டோ ஸ்டாண்டில், சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரித்ததில், அவர், டி.ஆர்., நகர், கருணாகரப்பிள்ளை வீதியை சேர்ந்த ஸ்ரீநாத், 21, என்பதும், இவர் புதுச்சேரியில் பிரியாணி கடையில் வேலை செய்து வருவதும், திண்டிவனம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.அவரை கைது, செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 120 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்