| ADDED : ஜன 12, 2024 03:41 AM
பாகூர்: கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பாராட்டினார். சிலம்பம் இந்தியா அசோசியேஷன் சார்பில், 5வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். அதில், சிலம்பம் புதுச்சேரி அசோசியேஷன் சார்பில் பங்கேற்று விளையாடிய, குருவிநத்தம் அபி அடிமுறை சிலம்ப கழக வீரர் மற்றும் வீராங்கனைகள், 16 தங்கம், 4 வெள்ளி, 4 வெங்கலம் ஆகிய பதக்கங்களை வென்று, இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகள், செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை பாகூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர் ஹேமச்சந்திரன் மற்றும் நிர்வாககிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.