உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சேத்திலால் உயர்நிலைப் பள்ளி ரூ.83 லட்சத்தில் புனரமைப்பு

 சேத்திலால் உயர்நிலைப் பள்ளி ரூ.83 லட்சத்தில் புனரமைப்பு

புதுச்சேரி: அபிஷேகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.83 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். மணவெளி அடுத்த அபிஷேகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவை பழுதடைந்து இருந்தது. இதனையடுத்து சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை மூலம் பள்ளி கட்டடங்களை புனரமைத்து மேம்படுத்துதல் மற்றும் பழுதடைந்த சுற்றுச் சுவரை புதிதாக கட்டுதல் ஆகிய பணிக்காக 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் மாணவர்களின் கழிப்பறை கட்டடங்களை புனரமைப்பதற்காக 33 லட்சத்து 38ஆயிரம் ரூபாய் மதிப்பீடு செய்து, அரசாணை பெற்று தந்தார். இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம் பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடம் கோட்டம்- 2 செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவி பொறியாளர் எழில்வண்ணன், இளநிலை பொறியாளர் ரிஷி, தலைமை ஆசிரியர் டார்லிங் வின்ஸ் இந்திரா, முக்கிய பிரமுகர்கள் மாயகிருஷ்ணன், ராஜம், கதிரேசன், உமா, ஜெகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை