உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கர் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

சங்கர் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

வில்லியனுார்: வில்லியனுார் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.வில்லியனுார் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் 39வது ஆண்டு விழா திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. சங்கர் கல்வி குழும தலைவர் சத்தியகுமாரி கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சுகந்தி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினராக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் பங்கேற்று, பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மற்றும் கடந்தாண்டு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.பள்ளி நிர்வாகி விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை மேலாளர் சுந்தரகணேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர். ஆசிரியர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை