உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாண்டி மெரினா கடலில் மூழ்கி மாணவர் பலி; புதுச்சேரியில் தொடரும் சோகம்

பாண்டி மெரினா கடலில் மூழ்கி மாணவர் பலி; புதுச்சேரியில் தொடரும் சோகம்

புதுச்சேரி : பாண்டி மெரினா கடற்கரை பாறையில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.புதுச்சேரி வேல்ராம்பட்டு , துலுக்கானத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஜெகதீஷ், 16; காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தடகள போட்டிக்கு தயாராகி வந்த ஜெகதீஷ் நேற்று காலை 6:30 மணிக்கு, தடகள பயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் காலையில் பயிற்சிகளை முடித்து கொண்டு தனது நண்பர்கள் 4 பேருடன், காலை 8:45 மணிக்கு மெரினா கடற்கரை சென்றார். முகத்துவாரம் அருகே பாறைகள் மீது ஜெகதீஷ், அவரது நண்பர்கள் நின்று செல்பி எடுத்தனர்.திடீரென எழுந்த ராட்ச அலை அவர்கள் மீது விழுந்தது. அதில், நிலை தடுமாறி ஜெகதீஷ் கடலுக்குள் விழுந்தார். பாறையை பற்றிக் கொண்டு தொங்கிய அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர்.பாறையில் இருந்து கை நழுவி தண்ணீருக்குள் விழுந்தார். சுழல் நிறைந்த ஆழமான தண்ணீருக்குள் மூழ்கிய ஜெகதீைஷ அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தும், மூச்சுபேச்சின்றி கிடந்தார்.உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு பரிசோதனை செய்தபோது, அவர், ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுதவிர, கோட்டக்குப்பம் தந்திராயன் குப்பம் அருகே நேற்று முன்தினம் ஜெர்மனியைச் சேர்ந்த 77 வயது நபர் கடலில் மூழ்கி இறந்தது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை