உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 22,000 வான்கோழி குஞ்சுகள் மானிய விலையில் வழங்கல்

22,000 வான்கோழி குஞ்சுகள் மானிய விலையில் வழங்கல்

புதுச்சேரியில்: வான்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 22 ஆயிரம் வான் கோழி குஞ்சுகள் மானிய விலை வழங்கும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், புதுச்சேரியில் வான்கோழி வளர்ப்பு முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரித்தல், புரதச் சத்து தேவையை மேம்படுத்துதல் மற்றும் பயனாளிகளிடையே வீட்டுப்புற வான்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக 22 ஆயிரம் வான் கோழிக்குஞ்சுகளை மானிய விலையில் வழங்கும் பணி, கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் தலைமையில் துவங்கியது. அதனை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள 9 கால்நடை மருத்துவமனை மருந்தகங்களில், ஒரு பயனாளிக்கு, 6 வாரம் வளர்ந்த 4 வான்கோழி குஞ்சுகள் ரூ. 540 க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதனையொட்டி, புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மருந்தகத்தில் இணை இயக்குனர் காந்திமதி தலைமையில் கால்நடை மருத்துவர் சரளாதேவி நேற்று முதற்கட்டமாக 1,000 வான் கோழி குஞ்சுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை