உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி - 20 கிரிக்கெட் போட்டி: லாஸ்பேட்டை அணி வெற்றி

டி - 20 கிரிக்கெட் போட்டி: லாஸ்பேட்டை அணி வெற்றி

புதுச்சேரி: டி - 20 கிரிக்கெட் போட்டியில், லாஸ்பேட்டைஅணி வெற்றி பெற்றது.புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் அசோசியேசன் சார்பில், உள்ளூர் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 15வது டி - 20 கிரிக்கெட் போட்டி லாஸ்பேட்டை மைதானத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி துவங்கியது. லாஸ்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிட்லா சத்திய நாராயணா,தமிழ்நாடு முன்னாள் சீனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.புதுச்சேரியில் உள்ள 32 அணிகள் பங்கேற்றுள்ளன.இதன் 24வது போட்டியில் லாஸ்பேட்டை மற்றும் என்.ஆர்.சன் லைட் கிரிக்கெட் அணிகள் மோதின. முதலில் ஆடிய லாஸ்பேட் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கணபதி 63 பந்துகளில் 16 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 109 ரன்களை குவித்தார். தேவா 22 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்உட்பட 49 ரன்கள் எடுத்தார்.பின் களமிறங்கிய என். ஆர். சன்லைட் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. அந்த அணியின் குமரேசன் 46 ரன், கவிபிரசன்னா 32 ரன் எடுத்தனர். முருகன், அங்கப்பன் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். சுரேந்தர்,நரேஷ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். லாஸ்பேட்டை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ