உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஊழியர்கள், போலீசார் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு

அரசு ஊழியர்கள், போலீசார் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு

புதுச்சேரி, : தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவலர்கள், ஊடகம் உள்ளிட்ட பணியாளர்கள் தேர்தல் பணி சான்றிதழ் பெற்று ஓட்டளிக்க, வசதி செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு நாளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், காவலர்கள், அத்தியாவசிய சேவை பணியாளர்களான ஓட்டுநர்கள், நடத்துநர்கள், வாகன துப்புரவு பணியாளர்கள், வீடியோகிராபர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவோர், ெஹல்ப்லைன் ஊழியர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்துள்ளது.சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் அதிகாரியால், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி சான்றிதழ் பெறும் விண்ணப்பம், இரண்டாவது தேர்தல் பயிற்சி அமர்வின் போது விநியோகிக்கப்படும்.காவலர்களை பொருத்தவரை, தேர்தல் பிரிவு, காவல் கண்காணிப்பாளர் படிவம் 12,ஏ.,வைவிநியோகிப்பார். ஊடகம் உள்ளிட்ட அரசு சாரா ஊழியர்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரி, படிவம்12,ஏ.,வை விநியோகிப்பார்.பூர்த்தி செய்யப்பட்ட படிவம், 12,ஏ.,வைஅரசு ஊழியர்கள், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் தேர்தல் பணி ஆணையுடன், இரண்டாவது தேர்தல் பயிற்சி அமர்வின் போதே சமர்ப்பிக்க வேண்டும்.காவல்துறை பணியாளர்கள், அரசு சாரா பணியாளர்கள், வரும், ஏப்.,12.,ம் தேதிக்கு முன்னதாக, தேர்தல் பிரிவு காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.பெறப்பட்ட படிவம் 12.ஏ,வின் அடிப்படையில், உதவி தேர்தல் அலுவலர், படிவம் 12.,பி, வழங்குவர். தேர்தல் பணி சான்றிதழை அரசு அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், 3வது தேர்தல் பயிற்சியின் போதும், மற்றவர்களுக்கு ஓட்டுப்பதிவுக்கு, 2 நாள் முன்னதாக விநியோகிப்பர்.அந்த வாக்காளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஒட்டுச்சாவடியிலோ, அல்லது அருகில் உள்ள ஒட்டுச்சாவடியிலோ தேர்தல் பணி சான்றிதழை கொண்டு ஓட்டளிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை