உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிகிச்சைக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர் திடீர் மரணம்

சிகிச்சைக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர் திடீர் மரணம்

பாகூர்: பாகூர் அருகே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பிய லாரி டிரைவர், திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் 31; லாரி டிரைவர். இவரது மனைவி கலையரசி 25. இவர்களுக்கு 3 வயது மகள், 8 மாத ஆண் குழந்தை உள்ளனர்.இந்நிலையில், அருள்ராஜ் நேற்று காலை தனக்கு உடம்பு வலிப்பதாக, அவரது மனைவியுடம் கூறி விட்டு, கரையாம்புத்துாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு, பணியில் இருந்த டாக்டரிடம், அருள்ராஜ் தனக்கு தோல் பட்டை, கழுத்து, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் வலி இருப்பதாக கூறி உள்ளார்.டாக்டர் அவரை பரிசோதித்து, ஊசி போட்டு, மாத்திரைகளை வழங்கினார். வீட்டிற்கு வந்த அருள்ராஜ் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார். உடனே, அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், மருத்துவமனையின் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.அருள்ராஜ் உறவினர்கள் கூறுகையில் 'கரையாம்புத்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அருள்ராஜ் தனக்கு உடல் வலி, மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி உள்ளார். மருத்துவர்கள் அவரை தொட்டு கூட பார்க்காமல், ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்பி உள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அவர் இறந்த விட்டார். அவரது இறப்புக்கு மருத்துவர்கள் அலட்சியமே காரணம்' என, குற்றம்சாட்டினர்.இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, அருள்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை