மேலும் செய்திகள்
கடற்கரை சாலையில் விக்டல் சிலை
10 hour(s) ago
கொத்தனார் தற்கொலை: போலீசார் விசாரணை
15 hour(s) ago
ஊஞ்சல் உற்சவம்
15 hour(s) ago
வீட்டில் இருந்த 4 சவரன் செயின் திருட்டு :மைனர் பெண் கைது
16 hour(s) ago
புதுச்சேரி : போக்குவரத்து துறையின் பி.ஓய்.05 ஆர் வரிசை பேன்சி எண்கள் பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து துறையின், பி.ஒய்-05 ஆர் வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் இன்று 24ம் தேதி காலை 11:00 மணி முதல் வரும் 29ம் தேதி மாலை 4:30 மணி வரை ஏலத்திற்கு பங்கேற்க பதிவு செய்யலாம்.இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு, தேவையான பெயர், பாஸ்வேர்டு https://parivahan.gov.in/fancy, என்ற இணையதளத்தில், 'நியூ பப்ளிக் யூசர்' கிளிக் செய்து பதிந்து இன்று முதல் வரும், 28 ம் தேதி பெற்று கொள்ளலாம்.இவ்வாறு பதிவு செய்தவர்கள் வரும் 29ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம். இந்த இ-ஆக் ஷன் ஏலத்தில் பங்கு பெற விரும்பம் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை, https://transport.py.gov.in, என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.விண்ணப்ப தொகையின் விவரம், ஈ.எம்.டி.,யின் விபரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் போக்குவரத்து துறை அலுவலக தொலைபேசி எண் 0413 - 2280170 மூலம் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏலம் சம்மந்தப்பட்ட பண பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ, காசோலையாக ஏற்றுக்கொள்ளப்படாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
10 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago