உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வ.உ.சி., பள்ளி ஆண்டு விழா

வ.உ.சி., பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி மிஷன் வீதி வ.உ.சி., பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி முதல்வர் கரிமா தியாகி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் பத்மாவதி முன்னிலை வகித்தார். வேதியியல் விரிவுரையாளர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார் வரவேற்றார்.பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார். கணித விரிவுரையாளர் சகுந்தலா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பக்தன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை