உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஜூனியர் ஹாக்கி உலக கோப்பைக்கு வரவேற்பு

 ஜூனியர் ஹாக்கி உலக கோப்பைக்கு வரவேற்பு

பாகூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு இணைந்து நடத்தும், 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நாளை 28ம் தேதி துவங்கி டிசம்பர் 10ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. இப்போட்டிக்கான வெற்றி கோப்பை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணமாக எடுத்துச் செல்லப்படுகிறது.அந்த வகையில், புதுச்சேரியில் இருந்து கடலுார் சென்ற உலக கோப்பைக்கு, பாகூர் அருகே சோரியாங்குப்பம் - குருவிநத்தம் சந்திப்பில், குருவிநத்தம் ஹாக்கி கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையை செந்தில்குமார் எம்.எல்.ஏ., அறிமுகம் செய்து வைத்தார். பாகூர் கொம்யூன் ஆணையர் சதாசிவம் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை