உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

நெட்டப்பாக்கம் : திருமணம் நிச்சயிக்கப்பட்ட தங்கையை காணவில்லை என அண்ணன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நெட்டப்பாக்கம் நேரு நகரைச் சேர்ந்தவர் சந்தியா 28, பி.எஸ்சி., முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு வரும் 26ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தியா கடந்த 21ம் தேதி காலை திருமண உதவித்தொகை பெற விண்ணப்பிக்க போவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லை என, டைரியில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.இதுகுறித்து அவரது அண்ணன் குருநாதன் கொடுத்த புகாரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை