உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோபுர கலசங்கள் திருடிய வாலிபர் கைது

கோபுர கலசங்கள் திருடிய வாலிபர் கைது

காரைக்கால்: காரைக்காலில் மீனவ கிராமத்தில் கோவில் கோபுர கலசங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் கோட்டுச்சேரிமேடு சுனாமி நகரில் உள்ள ஸ்ரீ வழியாரண சுவாமி திருக்கோயில் கோயிலின் நேற்று முன்தினம் கோட்டுச்சேரிமேடு சுனாமி நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்,தனது மகன் மதிவாணனுடன் அதிகாலை குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோயில் அருகே சந்தம் கேட்டதால் தந்தை, மகன் இருவரும் சென்று பார்த்தனர்.அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் சாக்கில் சில பொருட்களை வைத்து கட்டிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை பிடித்த போது அவர் வைத்திருந்த சாக்குபையில் 3 கோயில் கலசங்கள் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ராமு, சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் சீர்காழி தாலுகா வானகிரி தெற்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன், 25; என தெரியவந்தது. அவரிடம் ரூ.75ஆயிரம் மதிப்புள்ள மூன்று கோபுர கலசங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகர போலீசார் சரவணன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை