உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தன்வந்திரி நகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்த போது, கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த இசக்கி (எ) இசக்கிமுத்து 22; என்பதும், இவர் அடிதடி வழக்கு இருப்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை