உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் ழ கரம் தமிழர் பெருவிழா

மணக்குள விநாயகர் கல்லுாரியில் ழ கரம் தமிழர் பெருவிழா

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கல்லுாரியில் தமிழர் திருநாளை முன்னிட்டு 'ழ' கரம் தமிழர் பெருவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலை வர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் தலைமை தாங்கினர். விழாவினை பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி துவக்கி வைத்தார்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வழிகாட்டுதல்படி, தமிழர் பெருமையைப் போற்றும் வகையில் தமிழர் கோவில் வழிபாடு, தமிழர் அரசவை, கடை ஏழு வள்ளல்கள், திருவள்ளுவர், கம்பர், சிலப்பதிகாரம், மணிமேகலை தலைப்பிலான அரங்கங்கள் மற்றும் தமிழர் விருந்தோம்பல், பாரம்பரிய உணவுமுறை, மருத்துவம், ஐந்திணைக் காட்சிகள், தமிழர் விளையாட்டுகள், ஆடை அணிகலன்கள், திருமணம் மற்றும் சடங்கு முறைகள், சந்தையமைப்பு, கல்வெட்டு, வணிகம் மற்றும் தொழில் நுட்பம், பழங்கால இசைக்கருவிகள், தமிழர் விழாக்கள், கலைகள், இலக்கியம் மற்றும் காப்பிய நாடக நிகழ்வுகள், தமிழர் திருநாள் உள்ளிட்ட பல அரங்குகள் இடம்பெற்றன.நடுவர்களாக மதகடிப்பட்டு காமராஜர் அரசு கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் சவுந்தரவள்ளி, அன்புச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு, முதல் ஐந்து இடங்களான தமிழர் கல்வெட்டு, வணிகம், தொழில்நுட்பம், தமிழர் பாரம்பரிய உணவுகள், சந்தை அமைப்பு, பழங்கால இசைக்கருவிகள், தமிழர் வாழ்வில் விழா ஆகிய அரங்குகளை தேர்வு செய்தனர். அவற்றிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை