உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்டல அளவிலான அறிவியல் கருத்தரங்கு

மண்டல அளவிலான அறிவியல் கருத்தரங்கு

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கருத்தரங்கு, கல்வே கல்லுாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.  பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி கருத்தரங்கை துவக்கி வைத்தார். பள்ளியின் துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார்.  பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் 76 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று, ‘இந்தியாவின் 2047ம் ஆண்டிற்கான எரிசக்திக் கலவை: வாய்ப்புகளும் சவால்களும்’ தலைப்பின் அடிப்படையில் தங்களது விளக்கக்காட்சிகளை வழங்கினர்.  அதில், இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள், சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், நீர்மின் ஆற்றல், அணுசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி வளங்களின் பங்களிப்பு, அவற்றின் வாய்ப்புகள் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து முன்வைத்தனர். மண்டல அளவிலான கருத்தரங்கில் தேர்வு செய்யப்பட்ட 6 சிறந்த விளக்கக் காட்சிகள் வழங்கிய மாணவர்கள், வரும் 28ம் தேதி நடக்கும் மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி