உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மருத்துவமனையில் அஷ்வின் தாய் அட்மிட்

மருத்துவமனையில் அஷ்வின் தாய் அட்மிட்

சென்னை: ரவிச்சந்திரன் அஷ்வினின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 37. தமிழகத்தை சேர்ந்த இவர், ராஜ்கோட்டில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் பங்கேற்றார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜாக் கிராலேவை அவுட்டாக்கியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் கைப்பற்றினார்.இந்நிலையில் அஷ்வின், தனது குடும்ப உறுப்பினரின் அவரச மருத்துவ காரணங்களுக்காக ராஜ்கோட் டெஸ்டில் இருந்து பாதியில் விலகினார். நேற்று அஷ்வினுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் 'பீல்டிங்' செய்தார்.இப்போட்டியின் வர்ணனையாளராக உள்ள தினேஷ் கார்த்திக் கூறுகையில்,''அஷ்வின் எந்த நேரத்தில் இப்போட்டியில் இணைந்து பேட்டிங், பவுலிங் செய்யலாம். இதற்கு அம்பயரும் அனுமதி அளிப்பர்' என தெரிவித்திருந்தார். ஆனால் அஷ்வின் திரும்ப வாய்ப்பு குறைவு. இவர், 4, 5வது டெஸ்டில் பங்கேற்பதும் சந்தேகமாக உள்ளது.பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில் ''அஷ்வின் தனது தாயாரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து பாதியில் விலகினார். அவரது தாயார் விரைவில் நலம் பெற வேண்டும்,'' என தெரிவித்திருந்தார்.இதற்கிடையே, அஷ்வின் தாய் சித்ராவுக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் தான் உடனடியாக அஷ்வின், சென்னை திரும்பினார். சித்ராவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 20, 2024 09:06

அஸ்வின் தாயார் விரைவில் பூரண குணமடைய வேண்டும். பிரார்த்தனைகள்.


PR Makudeswaran
பிப் 18, 2024 09:55

விரைவில் நலம் பெற இறையருள் உதவட்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை