உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெற்றியை நோக்கி வங்கதேசம்: அயர்லாந்து அணி தடுமாற்றம்

வெற்றியை நோக்கி வங்கதேசம்: அயர்லாந்து அணி தடுமாற்றம்

மிர்புர்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் வங்கதேச அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 476, அயர்லாந்து 265 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 156/1 ரன் எடுத்திருந்தது. ஷாத்மன் (69), மோமினுல் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.நான்காம் நாள் ஆட்டத்தில் மோமினுல் ஹக் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது ஷாத்மன் (78) அவுட்டானார். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (1) ஏமாற்றினார். பின் இணைந்த மோமினுல், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி கைகொடுத்தது. முஷ்பிகுர், தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 123 ரன் சேர்த்த போது மோமினுல் (87) அவுட்டானார்.வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 297/4 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. முஷ்பிகுர் (53) அவுட்டாகாமல் இருந்தார்.பின், 509 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் ஆன்டி பால்பிர்னி (13), பால் ஸ்டிர்லிங் (9) ஏமாற்றினர். ஹாரி டெக்டர் (50) ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 176/6 ரன் எடுத்து, 333 ரன் பின்தங்கி இருந்தது. வங்கதேசம் சார்பில் தைஜுல் 3 விக்கெட் கைப்பற்றினார்.கடைசி நாளில் வங்கதேச பவுலர்கள் அசத்தினால், தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வெல்லலாம்.தைஜுல் முதலிடம்டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த வங்கதேச பவுலர்கள் பட்டியலில் சாகிப் அல் ஹசனை (246 விக்.,) முந்தி முதலிடம் பிடித்தார் தைஜுல் இஸ்லாம். இதுவரை 57 டெஸ்டில், 249 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை