மேலும் செய்திகள்
அரையிறுதியில் இந்தியா ஏ
22 hour(s) ago
தமிழக அணி அசத்தல்
23 hour(s) ago
ரஞ்சி கோப்பை: மீண்டது தமிழகம்
16-Nov-2025 | 1
கோல்கட்டா டெஸ்ட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி
15-Nov-2025 | 3
மிர்புர்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் வங்கதேசத்தின் மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் கடந்தனர்.வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. மிர்புரில் 2வது டெஸ்ட் நடக்கிறது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு ஷாத்மன் இஸ்லாம் (35), மகமதுல் ஹசன் ஜாய் (34) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (8) ஏமாற்றினார். பின் இணைந்த மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது மோமினுல் (63) அவுட்டானார்.ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 292 ரன் எடுத்திருந்தது. 100 வது டெஸ்டில் பங்கேற்கும் முதல் வங்கதேச வீரரான முஷ்பிகுர் (99), லிட்டன் தாஸ் (47) அவுட்டாகாமல் இருந்தனர். அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிர்னி 4 விக்கெட் கைப்பற்றினார்.
22 hour(s) ago
23 hour(s) ago
16-Nov-2025 | 1
15-Nov-2025 | 3