உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரோகித் சர்மா, கோலிக்கு செக்: காம்பிர் கணக்கு என்ன

ரோகித் சர்மா, கோலிக்கு செக்: காம்பிர் கணக்கு என்ன

மும்பை: இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது. இனி நட்சத்திர வீரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'ரெஸ்ட்' எடுக்க முடியாது. அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.இலங்கை செல்லும் இந்திய அணி மூன்று 'டி-20' (ஜூலை 27, 28, 30), மூன்று ஒருநாள் போட்டிகளில் (ஆக. 2, 4, 7) பங்கேற்கிறது. 'டி-20' அணிக்கு சூர்யகுமாரும் ஒருநாள் போட்டி அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக களமிறங்க உள்ளனர்.ஒருநாள் தொடரில் இருந்து 'சீனியர்' வீரர்களான ரோகித், 37, கோலிக்கு, 35, விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். பணிச்சுமையை காரணம் காட்டி 'ரெஸ்ட்' எடுக்க முடியாது என இவர்களுக்கு உணர்த்தப்பட்டது. இதே கருத்தை புதிய பயிற்சியாளர் கவுதம் காம்பிரும் வலியுறுத்தினார்.இலங்கை புறப்படுவதற்கு முன் மும்பையில் காம்பிர் அளித்த பேட்டி: பணிச்சுமை என்பது பேட்டர், பவுலர்களுக்கு வேறுபடும். பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு 'ரெஸ்ட்' அவசியம். ஆனால் பேட்டர்கள் நல்ல 'பார்மில்' இருந்தால், அனைத்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும். ரோகித், கோலியை பொறுத்தவரை சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தான் விளையாட போகின்றனர். இருவரும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். 2027ல் 'உலக' வாய்ப்பு: அடுத்த ஆண்டு நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கலாம். சிறப்பான உடற்தகுதியுடன் இருந்தால், 2027ல் தென் ஆப்ரிக்காவில் நடக்க இருக்கும் உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) ரோகித், கோலி இடம் பெறலாம். எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட்டில் தொடர முடியும் என்பது இருவரது தனிப்பட்ட முடிவு. இதில் நான் எதுவும் சொல்ல முடியாது.உலகத் தரம் வாய்ந்த வீரர்களான ரோகித், கோலி ரவிந்திர ஜடேஜா ஓய்வால், 'டி-20' அணி மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 50 ஓவர், டெஸ்டிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். மூன்றுவித போட்டிக்கு, மூன்று வெவ்வேறு அணிகளை தேர்வு செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை.விளையாட்டில் வெற்றி முக்கியம். இதற்கு 'டிரஸ்சிங் ரூமில்' (ஓய்வறையில்) வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியான 'டிரஸ்சிங் ரூம்' சூழல் வெற்றியை தேடித் தரும். வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பது அவசியம்.இவ்வாறு காம்பிர் கூறினார்.

சூர்யா ஏன்...

இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறுகையில்,''டி-20 கேப்டன் பதவிக்கு நல்ல உடற்தகுதியுடன் இருப்பவரை தேடினோம். 'டிரஸ்சிங் ரூமில்' சக வீரர்களின் கருத்தை கேட்டோம். இதன் அடிப்படையில் கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார். 'டி-20' அரங்கில் சிறந்த பேட்டர். நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். கேப்டன் பதவிக்கு தகுதியானவர். ஹர்திக் பாண்ட்யா முக்கியமான வீரர் தான். உடற்தகுதி தான் இவரது பிரச்னை. இலங்கை உடனான ஒருநாள் தொடருக்கு ரவிந்திர ஜடேஜாவை நீக்கவில்லை. அக்சர் படேல், ஜடேஜா என இருவரையும் தேர்வு செய்ய இயலாது. வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்,''என்றார்.

நல்லுறவு

ஐ.பி.எல்., தொடரில் காம்பிர்-கோலி கடந்த காலங்களில் மோதிக் கொண்டனர். இது பற்றி காம்பிர் கூறுகையில்,''களத்தில் தங்களது அணிக்காக போராடுவது ஒவ்வொரு வீரரின் உரிமை. கோலியுடன் நல்லுறவு உள்ளது. இந்திய அணி, 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாக செயல்பட உள்ளோம். இருவரும் சேர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்ப்போம்,''என்றார்.

வரவேற்பு

'டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் நேற்று இலங்கை சென்றனர். இவர்களுக்கு பல்லேகலே ஓட்டலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை