உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இங்கிலாந்து அபார பந்துவீச்சு: இலங்கை அணி 236 ரன்

இங்கிலாந்து அபார பந்துவீச்சு: இலங்கை அணி 236 ரன்

மான்செஸ்டர்: இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன் எடுத்தது.இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மான்செஸ்டரில் முதல் டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்கா (4), திமுத் கருணாரத்னே (2), மாத்யூஸ் (0) ஏமாற்றினர். குசால் மெண்டிஸ் (24), தினேஷ் சண்டிமால் (17) சோபிக்கவில்லை. கமிந்து மெண்டிஸ் (12), பிரபாத் ஜெயசூர்யா (10) நிலைக்கவில்லை. இலங்கை அணி 113 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.பின் இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வா, மிலன் ரத்னாயகே ஜோடி நம்பிக்கை தந்தது. பொறுப்பாக ஆடிய தனஞ்செயா அரைசதம் விளாசினார். எட்டாவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது பஷீர் பந்தில் தனஞ்செயா (74) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய மிலன் (72) தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் வோக்ஸ், சோயப் பஷீர் தலா 3, அட்கின்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 22/0 ரன் எடுத்திருந்தது. டக்கெட் (13), லாரன்ஸ் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை