உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்: பெண்கள் டி-20 உலக கோப்பையில்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்: பெண்கள் டி-20 உலக கோப்பையில்

துபாய்: பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயது) லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் (2025, ஜன. 19) மோதுகின்றன.மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் (2025, ஜன. 18 - பிப். 2) நடக்கவுள்ளது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-3' இடம் பிடிக்கும் அணிகள், 2 பிரிவுகளாக 'சூப்பர்-6' சுற்றில் விளையாடும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதியில் (ஜன. 31) மோதும். பைனல் பிப். 2ல் நடக்கிறது. அரையிறுதி, பைனலுக்கு 'ரிசர்வ் டே' உண்டு. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.'ஏ' பிரிவில் இந்தியா, மலேசியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 2025, ஜன. 19ல் சந்திக்கிறது. அதன்பின் மலேசியா (ஜன. 21), இலங்கையை (ஜன. 23) எதிர்கொள்கிறது.'பி' பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, 'சி' பிரிவில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, சமோவா, ஆப்ரிக்க தகுதிச் சுற்று அணி, 'டி' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஆசிய தகுதிச் சுற்று அணிகள் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை