மேலும் செய்திகள்
இளம் இந்தியா ரன் குவிப்பு: வைபவ், திரிவேதி சதம்
01-Oct-2025
கோல்டு கோஸ்ட்: இந்திய வீராங்கனைகள் பவுலிங்கில் அசத்த, ஆஸ்திரேலியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 212 ரன் எடுத்தது.ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், இந்தியா 'ஏ', ஆஸ்திரேலியா 'ஏ' பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீராங்கனைகள் தொல்லை தந்தனர். பிரியா மிஷ்ரா பந்தில் எம்மா டி ப்ரூஹே (12), நிகோல் பால்டம் (1), டெஸ் பிளிண்டாப் (5) அவுட்டாகினர். மின்னு மணி 'சுழலில்' கேப்டன் சார்லி நாட் (3), மேடி டார்க் (5), லில்லி மில்ஸ் (5) சிக்கினர். ஜார்ஜியா (71) அரைசதம் கடந்தார். மைட்லன் பிரவுன் (30), கேட் பீட்டர்சன் (26), கிரேஸ் பார்சன்ஸ் (35) ஓரளவு கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் மின்னு மணி 5, பிரியா 4 விக்கெட் சாய்த்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு பிரியா புனியா (2) ஏமாற்றினார். சுபா (22) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 100 ரன் எடுத்திருந்தது. ஸ்வேதா ஷெராவத் (40), தேஜல் ஹசாப்னிஸ் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.
01-Oct-2025