மேலும் செய்திகள்
ரன் மழையா... சுழல் புயலா * இரண்டாவது டெஸ்ட் ஆடுகளம் எப்படி
21 hour(s) ago
வங்கதேச அணி ஆதிக்கம்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம்
22 hour(s) ago
நத்தம்: சுபம் கஜூரியா இரட்டை சதம் விளாச, ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 587 ரன் குவித்தது.தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் லீக் போட்டியில் சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் காஷ்மீர் அணி 349/4 ரன் எடுத்திருந்தது. கஜூரியா (149) அவுட்டாகாமல் இருந்தார்.மூன்றாம் நாள் ஆட்டத்தில் சுபம் கஜூரியா (202), சாஹில் (107) கைகொடுக்க காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 587/9 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. ஆட்டநேர முடிவில் சத்தீஸ்கர் அணி 2வது இன்னிங்சில் 46/2 ரன் எடுத்திருந்தது.மும்பை 'பாலோ-ஆன்'கோவையில் நடக்கும் லீக் போட்டியில் ஹரியானா அணி முதல் இன்னிங்சில் 419 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சில் 245 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆன மும்பை அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மும்பை அணி, 3ம் நாள் முடிவில் 83/2 ரன் எடுத்து தடுமாறியது.ரயில்வே ஆதிக்கம்சேலத்தில் நடக்கும் லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மும்பை அணி 570 ரன் குவித்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய குஜராத் அணி 227 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இரண்டாவது இன்னிங்சில் ரயில்வே அணி 135/5 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பின் 482 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, ஆட்டநேர முடிவில் 91/4 ரன் எடுத்திருந்தது.ஜார்க்கண்ட் அபாரம்திருநெல்வேலியில் நடக்கும் லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 225, ஜார்க்கண்ட் 289 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சில் ம.பி., அணி 238 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி, ஆட்டநேர முடிவில் 37/1 ரன் எடுத்திருந்தது.
21 hour(s) ago
22 hour(s) ago