உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ஆப்கனை வெல்லுமா இந்தியா * இன்று உலக கால்பந்து தகுதிச்சுற்று

ஆப்கனை வெல்லுமா இந்தியா * இன்று உலக கால்பந்து தகுதிச்சுற்று

அபஹா: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இதுவரை மோதிய முதல் இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் இந்திய அணி 3 புள்ளி பெற்று 3வது இடத்தில் உள்ளது. இன்று இந்திய அணி (117 வது இடம்) 3வது போட்டியில், 158 வது இடத்திலுள்ள ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ளது. இப்போட்டி சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் மைதானத்தில் நடக்கவுள்ளது.இரு அணிகள், கடந்த 2019, 2021 ல் மோதிய உலக கோப்பை தகுதிப் போட்டி 1-1 என சமன் ஆகின. ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்தியா 2-1 என ஆப்கானிஸ்தானை வென்றது. இம்முறை சுனில் செத்ரி தலைமையிலான இந்தியா, மீண்டும் வெல்லும் பட்சத்தில், உலக கோப்பை கால்பந்து மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு, முதன் முறையாக முன்னேறும் வாய்ப்பு பிரகாசம் அடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை